அண்ணா கட்டுமான தொழிற்சங்கம் திமுகவுக்கு ஆதரவு!

கோவை; அண்ணா கட்டுமானத் தொழிற்சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக‍ அந்த சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


கோவை; அண்ணா கட்டுமானத் தொழிற்சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக‍ அந்த சங்கத்தின் கோவை மாவட்டத்

தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அண்ணா கட்டுமான தொழிற்சங்க தலைவர் முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது;

மத்தியில் ஆளும் பாஜ அரசு தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. மாநிலத்தை ஆளும் அதிமுக அரசுக்கு கட்டுமான அமைப்பு சாரா வாரியங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் கூட்டணிக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 2 கோடிக்கும் மேற்பட்ட கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை சீரமைக்கவும், மேம்படுத்தவும், தனி வாரியங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே, அண்ணா தொழிற்சங்கத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் பதிவு பெற்ற தொழிலாளர்களும் திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.” இவ்வாறு மாவட்ட அண்ணா கட்டுமான தொழிற்சங்க தலைவர் முருகேசன் கூறினார்

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...