கோவை: திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா கவலை தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை ஆதரித்து அக்கட்சயின் பேச்சாளர் விந்தியா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பரப்புரையின்போது நடிகை விந்தியா பேசியதாவது;
திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. மின் வெட்டு ஏற்படும். புரோட்டா கடைமுதல் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் திமுகவினர் அடிதடிரகளையில் ஈடுபடுவார்கள்.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் சொன்னதை செய்வார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினார்.
அவரின் வழியில் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலத் திட்டங்களை முறையாக வழங்கி மக்களின் ஆதரவை முழுமையாக பெற்று சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். தமிழக மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.” இவ்வாறு பரப்புரையில் அவர் பேசினார்.

பரப்புரையின்போது அதிமுக., அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.