கோவை: கோவை அருகே முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, பகுதியில் விபச்சார தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் போலீசார் திருமால் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பெண்கள் இருந்தனர்.
போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் 2 பேரும் தங்களது தொலைபேசி எண்ணை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் தங்களுடைய செல் நம்பரை பதிவிட்டு தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.