கோவை: தென்னை மட்டை விழுந்து மின்சாரம் தாக்கியதில் பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெள்ளாளபாளையம், புளியமரத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 45). விவசாயியான இவரது மனைவி கலைமணி. பிரகாஷ் விவசாயத்துடன் பால் வியாபாரமும் செய்து வந்தார்.
வழக்கம்போல நேற்று அதிகாலை தோட்டத்தில் இருந்த பசுமாட்டில் பால் கறந்துவிட்டு பாலை கேனில் நிறைத்துவிடு வியாபாரத்திற்கு புறப்பட்டார். அங்குள்ள சாலையில் சென்றபோது ஒரு மின் கம்பம்அருகே தென்னை மரம் உயரமாக வளர்ந்து இருந்தது. அப்போது தென்னை மரத்திலிருந்து ஒரு பழுத்த மட்டை பெயர்ந்து அங்கு சென்ற மின் கம்பியின்மீது விழுந்தது.
தென்னை மட்டை விழுந்த வேகத்தில் மின்கம்பி அறுந்து மொபட்டில் சென்ற பிரகாஷின் கால் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி பிரகாஷ் தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.