மன அழுத்தம்: 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை!

கோவை: மன அழுத்தம் காரணமாக இரண்டு குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: மன அழுத்தம் காரணமாக இரண்டு குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரமேஷ். துணிக்கடை ஊழியரான இவரது மனைவி பத்மாவதி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். பத்மாவதி கடந்த சில மாதங்களாகவே வாழ்க்கையில் விரக்தியுடன் காணப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கை மற்றும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று காயம் குணமடைந்த பத்மாவதி கர்நாடகாவில் உள்ள அவரது சித்தப்பா வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்கள் ஆறுதல் கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி னார். வெளியே சென்று திரும்பிய குடும்பத்தினர் பத்மாவதி மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருதுவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மனஅழுத்தம் காரணமாக பத்மாவதி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறினர்.

Newsletter

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...