அரசு அனுமதி பெறாத தங்கும் விடுதிகளுக்கு சீல்: வால்பாறை வட்டாட்சியர் எச்சரிக்கை!

கோவை: வால்பாறையில், அரசு அனுமதி பெறாத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: வால்பாறையில், அரசு அனுமதி பெறாத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக வால்பாறை ரொட்டிக்கடை சோலையார் அணை மற்றும் தேயிலைத் தோட்ட பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உருவாகியுள்ளன. வால்பாறை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வருவதால் இப்பகுதியில் தங்கும் விடுதிகளில் ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களை மாற்றி அமைப்பதற்கும் புதிதாக கட்டுவதற்கும் கண்டிப்பாக அரசு அனுமதி பெற்றாக வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். ஆனால் வால்பாறையில் ஒரு சிலர் மட்டுமே முறையான அனுமதி பெற்று தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர்.



இதனைத் தொடர்ந்து வால்பாறை வட்டாட்சியர் ராஜா தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் அனைத்து தங்கும் விடுதி கட்டடங்களுக்கும் பப்ளிக் பில்டிங் லைசென்ஸ் கண்டிப்பாக பெற்றாக வேண்டும். தவறும் காட்டேஜ் உரிமையாளர்களின் தங்கும் விடுதி கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று வால்பாறை வட்டாட்சியர் ராஜா அறிவுறுத்தியுள்ளார். கூட்டத்தில் வட்டாட்சியர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...