கோவை: தி.மு க.வினர் நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் புகுந்து கோஷமிட்டதால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.

தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதைத் தடுக்கும்விதமாக பல்வேறு காரணங்களைக் கூறி கிராமசபைக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகர் 6 -வது வட்டம் டி.டி.எஸ் நகர் பகுதியில் 6-வது வட்ட தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் தடையை மீறி இன்று காலை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
'அ.தி.மு.க. அரசை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில், பொதுமக்களுக்கு அ.தி.மு.க. அரசின் அடக்குமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டு அதில் பலர் தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.
தடையை மீறி நடைபெற்ற காரணத்தால் தி.மு.க.வினரை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் புகுந்து 'அ.தி.மு.க.வை நிராகரிக்க நீங்கள் யார்?' என கேள்விகளைக் கேட்டனர். இதனால் வாக்குவாத ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உடனடியாக ஏராளமான காவல்துறையினர் ஈடுபடுத்தபட்டனர். அதற்குள் இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் இருதரப்பினரையும் தடுத்ததுடன் தி.மு.க.வினரை மட்டும் வேனில் ஏற்றி கைது செய்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து சூழல் கட்டுக்குள் வந்தது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் குழுமியிருந்த அ.தி.மு.க.வினர் கூறுகையில், தற்போது கவுண்டம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தி.மு க. நிர்வாகிகள் அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். மீண்டும் அவர்கள் டி.வி.எஸ். நகர் பகுதியில் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். காவல்துறையினர் கைது செய்ததும் உடனடியாக அவர்களை விடுவித்தன் பின்னணி என்ன என கேள்வி எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் 6-வது வட்ட தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வன், 6-வது வட்ட துணைச் செயலாளர் கரு பழனியப்பன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சுந்தரம், தியாகராஜன், பகுதி தி.மு.க. பொறுப்பாளர் மதியழகன் மருத்துவரணி, கணேஷ் மற்றும் நிர்வாகிகள் சதீஷ் குமார், ஆனந்தபாபு, தேவேந்திரன், ரவிமுரசு, தம்பான், ஜகன் மோகன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.