வண்ண விளக்குகளால் ஜொலித்த கோவை தேவாலயங்கள்; கொரோனா விதிமுறையை பின்பற்றி சிறப்பு கிறிஸ்துமஸ் பிரார்த்தனை

கோவை: கோவை புனித மைக்கல் தேவாலயத்தில் தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பெண்கள் குழந்தைகள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை: கோவை புனித மைக்கல் தேவாலயத்தில் தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பெண்கள் குழந்தைகள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மைக்கல் தேவாலயமும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. 

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது புனித மைக்கேல் தேவாலயத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்பர், ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தேவாலயங்களில் நடைபெற்று வரும் கிருஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகளில் தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி குறைந்த அளவிலான மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 



நேற்று இரவு, மைக்கேல் தேவாலயத்தில் 11.30 மணி அளவில் சிறப்பு திருப்பலி கூட்டு பிரார்த்தனை தொடங்கியது. இதில் 500க்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் அமர்ந்து கூட்டு பிரார்த்தனை பாடல்களை பாடி, இறைவனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, 12 மணிக்கு தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிலில் குழந்தை இயேசு பிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



தொடர்ந்து, குழந்தை இயேசுவை தோளில் சுமந்தபடி மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஊழியர்களுடன் ஆலயத்தை சுற்றி வந்து குழந்தை இயேசுவின் வரலாறு மற்றும் நற்செய்தி அறிவித்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் உள்ளவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும், கொரோனா வைரஸ் முற்றிலுமாக உலகைவிட்டு அகலவும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...