கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் மாதிரி சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 2.7கி.மீ சுற்றளவில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஸ்மார்ட் சிட்டி பணிகளான சாலை அமைக்கும் பணிகள், பாதாளச் சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள், மின்சார புதைவடம், தொலைத் தொடர்பு கேபிள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், பாதசாரிகளுக்கான நடைபாதைகள், அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள், ஒளிரும் விளம்பரப் பலகைகள் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டார். இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், உதவிப் பொறியாளா் கமலக்கண்ணன், உதவி நிர்வாகப் பொறியாளர் கலாவதி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.