ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள்: விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்போது அவர் மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ 2.7கி.மீ சுற்றளவில்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஸ்மார்ட்‌ சிட்டி பணிகளான சாலை அமைக்கும்‌ பணிகள்‌, பாதாளச் சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌, மின்சார புதைவடம்‌, தொலைத்‌ தொடர்பு கேபிள்‌ அமைத்தல்‌, மழைநீர்‌ வடிகால்‌ அமைக்கும்‌ பணிகள்‌, பாதசாரிகளுக்கான‌ நடைபாதைகள்‌, அலங்கார தெருவிளக்குகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌, ஒளிரும்‌ விளம்பரப் பலகைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர்‌ பார்வையிட்டார். இதையடுத்து ஸ்மார்ட்‌ சிட்டி பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ மகேஷ் கனகராஜ்‌, உதவிப் பொறியாளா்‌ கமலக்கண்ணன்‌, உதவி நிர்வாகப்‌ பொறியாளர்‌ கலாவதி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...