கொரோனா தொற்று தடைகள் காரணமாக ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு குறைவான பக்தர்களே வருகை!

கோவை: கொரோனா தடைகள் அமாவாசையன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.



கோவை: கொரோனா தடைகள் அமாவாசையன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசையன்று அதிக அளவில் வருவது வழக்கம்.



இந்நிலையில், இந்த மாதத்திற்கான அமாவாசை பூஜைகள் நேற்று நடந்தது. வழக்கமாக ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் குவிவது வழக்கம். பக்தர்கள் வருகைக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.



ஆனால், கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த சில மாதங்களாக அமாவாசை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது.



கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் இருப்பதால், அமாவாசைக்கு முந்திய நாள் இரவு கோயில் நடை மூடப்பட்டது. இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசித்துச் சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...