தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, பாரம்பரிய உணவுகள் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


கோவை:

சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றும் தீர்மானம் 1967ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் சட்டப்பேரவையில் முன்வைத்து நிறைவேற்றப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியின் மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில், தமிழரின் பாரம்பரியம், தமிழ்நாட்டின் பெருமை, பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், பாரம்பரிய உணவுகளின் சிறப்பு, உணவுத் திருவிழா மற்றும் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவிகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரத்னா குழும நிறுவனங்களின் இயக்குநர் சித்ரா பழனியப்பன் மற்றும் அன்னை கஸ்தூரிபாய் மகளிர் மற்றும் நுகர்வோர் நலச்சங்கத்தின் செயலாளர் மகாலட்சுமி சுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழர் பண்பாடு, கலாச்சாரம், சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேய சேவையின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினர்.



கல்லூரி அறங்காவலர்கள் கனகவள்ளி சண்முகநாதன், நிர்மலா ராஜசபாபதி, கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...