கோவை: முதுகுத் தண்டுவடத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கப் பெற வேண்டிய மருத்துவ உபகரணங்கள் விரைவாக கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தண்டுவடப் பகுதியில் காயமடைந்த மாற்றுத்திறனாளிகள் கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். அதில், காயமடைந்த மாற்றுத்திறனாளிகள் எந்தப் பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் வேறொருவர் உதவியுடனே தங்களது தேவைகளைச் செய்ய முடிகிறது. இதனால் உடலளவிலும், பொருளாதார ரீதியாகவும் அவதிப்பட்டு வரும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

இயற்கை உபாதைகள், சிறுநீர்த் தொற்று, படுக்கைப் புண் போன்றவற்றால் முதுகுத் தண்டுவட பாதிப்பு ஏற்பட்டவர்கள் அவதிப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.
மேலும், தண்டுவடம் பாதித்தவருக்கு பாரா-குவாட் (Para-quad) திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் அரசு உதவி தொகை மற்ற மாவட்டங்களில் கிடைக்கப்பெறும் நிலையில், கோவையில் உள்ள தண்டுவடம் பாதித்தோருக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த அவர்கள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, உடனடியாக தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றித்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட சந்தோஷ்குமார் என்பவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தண்டுவடம் பாதித்தவர்கள் உள்ளதாகவும் அரசு வழங்கும் மருத்துவ நிவாரணத்தொகை உடனடியாக கிடைக்கவேண்டும் எனவும் கூறிய அவர் ஆரம்ப சுகாதாரத்துறை மூலமே இவை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.