விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் காத்திருப்பு போராட்டம்..!

கோவை: விவசாய சட்டத்திற்கு எதிராக போராடி உயிரிழந்த 11 விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், என, கோவையில் அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: விவசாய சட்டத்திற்கு எதிராக போராடி உயிரிழந்த 11 விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், என, கோவையில் அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.



புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 19 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பல்வேறு அமைப்பினர், கட்சியினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதுவரை, தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 11 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 



அவ்வாறு, உயிரிழந்த 11 பேருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், என.அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். 



இந்நிலையில், விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி, மக்கள் அதிகாரம், உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதில், பங்கேற்ற பெண்கள் உட்பட 87 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேளான் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதானிக்கும் அம்பானிக்கும் விவசாயத்தை விற்காதே, இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இதனைத் தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 87 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். விவசாய சங்கத்தினர் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...