கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்திற்கான, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், மற்றும் தீயணைப்புபடை வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று கோவை ஜி.என்.மில்ஸ் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக்ராஜ் தலைமையிலான, 130 காவலர்கள் பாதுகாப்புப் பணியினை மேற்கொண்டனர். தேர்வுக்கு வருபவர்களிடம் நுழைவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை பரிசோதித்த, பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத உள்ளே செல்பவர்கள் கைபேசி ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எதையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக, தேர்வுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வந்துளனரா என்று அதிகாரிகள் சரிபார்த்து அனுமதித்தனர். மேலும், அனைவருக்கும் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்பட்டது.
சுமார் 1600 பேர் கலந்து கொண்ட தேர்வு, காலை 11 மணிக்கு துவங்கியது. பின்பு, எழுத்துத்தேர்வு ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்றது.