கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட கூட்ஸ்ஷெட் சாலையில், பழைய பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, சாலையில் பள்ளம் ஏற்பட்டது.

மக்களுக்கு இடையூறாக இருந்த அந்த பள்ளம் குறித்து, காவல் துறையினரிடம் இருந்து தகவல் பெறப்பட்டதன் பேரில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இன்று அந்த சாலையை நேரில் ஆய்வு செய்தார்.

அவரின், உத்தரவின்படி மத்திய மண்டல உதவி ஆணையா் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று தடுப்புகள் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படாமல், இரண்டு, ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்றது, என மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.