கோவை கூட்ஸ்ஷெட்‌ சாலையில்,‌ போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பள்ளத்தை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட கூட்ஸ்ஷெட்‌ சாலையில்,‌ பழைய பாதாள சாக்கடை குழாய்‌ உடைப்பு ஏற்பட்டதன்‌ காரணமாக, சாலையில்‌ பள்ளம்‌ ஏற்பட்டது.

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட கூட்ஸ்ஷெட்‌ சாலையில்,‌ பழைய பாதாள சாக்கடை குழாய்‌ உடைப்பு ஏற்பட்டதன்‌ காரணமாக, சாலையில்‌ பள்ளம்‌ ஏற்பட்டது. 



மக்களுக்கு இடையூறாக இருந்த அந்த பள்ளம் குறித்து, காவல்‌ துறையினரிடம் இருந்து தகவல்‌ பெறப்பட்டதன் பேரில், மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இன்று அந்த சாலையை நேரில் ஆய்வு செய்தார். 



அவரின், உத்தரவின்படி மத்திய மண்டல உதவி ஆணையா்‌ மகேஷ்கனகராஜ்‌, உதவி செயற்பொறியாளர்‌ மற்றும்‌ உதவிப்‌ பொறியாளர்‌ ஆகியோர்‌ உடனடியாக அவ்விடத்திற்கு சென்று தடுப்புகள்‌ அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம்‌ பாதுகாப்பு வசதிகள்‌ ஏற்பாடு செய்தனர்.

போக்குவரத்து பாதிப்பு ஏதும்‌ ஏற்படாமல், இரண்டு, ஜே.சி.பி. இயந்திரங்கள்‌ மூலம்‌ சாலையில்‌ ஏற்பட்ட பள்ளத்தினை சரி செய்யும்‌ பணிகள்‌ துரிதமாக நடைபெற்றது, என மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...