மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, கோவையில் போசியாவின் சார்பில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம்..!

கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, கோவையில் போசியாவின் சார்பில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, கோவையில் போசியாவின் சார்பில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது: 

கடுமையான மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் உற்பத்தித்துறை சார்ந்திருக்கின்ற அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தி குறைத்துக் கொண்டு வருகின்றார்கள். இதனால், ஜாப் ஆர்டர்களை மட்டுமே நம்பி தொழில் செய்து வருகின்ற 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களும் அதைச் சார்ந்து இருக்கின்ற 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையும் தற்பொழுது கேள்விக்குறியாக மாற்றப்பட்டு வருகின்றன. 

தொடர்ச்சியாக, குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட போதும் எவ்விதமான கடனும் கிடைக்கப்படாமல், கடன் சுமைகளால் திண்டாடி வரும் சூழ்நிலையில், தற்போது தொழிற்சார்ந்து இருக்கின்ற அனைத்து மூலப் பொருள்களின் விலை ஏற்றத்தால், ஏதோ கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்து வந்த குறுந்தொழில் முனைவோர்களுக்கு, மேலும் இந்த மூலப்பொருள் விலையேற்றம் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 

என்ன செய்வதென்று அறியாத தொழில்முனைவோர்கள் தவித்து வருகின்றார்கள். மத்திய அரசு மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, உடனடியாக குறு, சிறு தொழில் முனைவோர்கள் உள்ளடக்கிய கமிட்டியை உருவாக்கிட வேண்டும். அதுபோல், கோவையில் செயில் கிடங்கை உடனடியாக திறந்திட வேண்டும். மூலப்பொருள்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுந்தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு தனி கடன் திட்டத்தை அறிவித்து, அவர்களோடு ஆண்டு கணக்கை கருத்தில் எடுத்துக் கொண்டு 25 சதவீதம் வரை சொத்துபினை இல்லாமல் கடன் வழங்கிட தனி திட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை, முன்வைத்து வரும் 15 ம் தேதி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் தொழில் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் குறுந் தொழில் முனைவோர்கள் சங்கமான டாக்ட் பங்கேற்கிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...