கோவையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கோவை: கோவையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி ஐசக் வீதியைச் சேர்ந்த ஒர்க்ஷாப் உரிமையாளர் திருவருள் (40). இவரது மனைவி கவிதா (39), இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்த கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல, பொள்ளாச்சி பொன்னாபுரம் மதுரை வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமி (60), இரத்த அழுத்தத்திற்கான மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனால், நேற்றிரவு மாத்திரையை மாற்றி சாப்பிட்டுள்ளார்.

இதனால் மயக்கமடைந்த அவரை உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடக்கிபாளையம் போலீசார் 174 சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...