கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ 24 மணிநேர குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ 24 மணிநேர குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ 24 மணிநேர குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்புரம்‌ திருவேங்கடசாமி சாலை, சா்சீவிராமன்‌ சாலை, மேற்கு சம்மந்தம்‌ சாலை, குருகோவிந்த்‌ சிங்‌ ரோடு, தடாகம்‌ ரோடு ஆகிய பகுதிகளில்‌ 24 மணி நநர குடிநீர்‌ வழங்கும்‌ திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ அவர்கள்‌, குடிநீர்‌ வழங்கும்‌ பணிகளுக்காக சாலைகளில்‌ குழாய்கள்‌ பதித்த பின்பு கசிவு ஏற்படாமல்‌ உள்ளதை உறுதி செய்த பின்பு, 24 மணிநேர குடிநீர்‌ பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சமன்‌ செய்து சீரமைக்க வேண்டும்‌. இந்தப்பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய பொறியாளா்களுக்கும்‌, சூயஸ்‌ நிறுவன ஒப்பந்ததாரர்களுக்கும்‌ அறிவுறுத்தினார்.



முன்னதாக மேற்கு மண்டலம்‌ கே.கே.புதூர்‌ மற்றும்‌ வார்டு எண்‌.22 சாய்பாபா காலனி பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ கால்வாயில்‌ குப்பைகள்‌ தேங்கா வண்ணம்‌ தூய்மைப் பணியாளர்கள்‌ கால்வாய்களில்‌ அடைக்கப்பட்ட குப்பைகளில்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ மேற்கொள்வதை ஆய்வு மேற்கொண்ட, ஆணையாளர்‌ அவர்கள்‌, பொதுமக்களிடம்‌ குப்பைகளை கால்வாய்கள்‌, சாலை ஓரங்களில்‌ கொட்டாமல்‌, மக்கும்‌ குப்பை, மக்கா குப்பை என தரம்‌ பிரித்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம்‌ வழங்கி, தங்கள்‌ பகுதிகளை தூய்மையாகவும்‌, சுகாதாரமாகவும்‌ வைத்திருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.



பின்னா்‌, வார்டு எண்‌.22 பாரதி பூங்கா, 5வது கிராஸ்‌ பகுதியில்‌ தூய்மைப் பணியாளர்கள்‌ வீடு வீடாக சென்று மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகளை வாகனங்கள்‌ மூலம்‌ ஏற்றிச்செல்லும்‌ பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர்‌ அவர்கள்‌, அப்பகுதி பொதுமக்களிடம்‌ சாலை ஓரங்களில்‌ குப்பைகளை கொட்டாமல்‌ குப்பைத்தொட்டிகளில்‌ மட்டுமே கொட்டி சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்‌ என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர்‌ (24x7 குடிநீர்‌ திட்டம்‌) பார்வதி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, உதவிப்பொறியாளா்‌ சத்தியமூரத்தி, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழுத்தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌ மற்றும்‌ பணி மேற்பார்வையாளர்‌, மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...