கோவை: கோவையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பி ஓடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பிரபு (20), இவர்மீது பிக்பாக்கெட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசார் இவரை தேடி வந்த நிலையில் நேற்று கொள்ளையன் பிரபுவை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் உதவி ஆய்வாளர் ரேவதி கொள்ளையனை கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார். மேலும், பரிசோதனை முடிந்த பின்னர் அவிநாசி சிறையில் அடைக்க இருந்தனர்.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனத்தில் இருந்து இறங்கியதும் கொள்ளையன் உதவி காவல் ஆய்வாளர் ரேவதியை தள்ளி விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீண்டும் கொள்ளையனை தேடி வருகின்றனர்.