பொள்ளாச்சி: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.ம.தே.க) பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இன்று கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சித் தொண்டர்கள் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.ம.தே.க) பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இன்று கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சித் தொண்டர்கள் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், தென் பெண்ணை ஆற்றுக்கும், தூள்செட்டி ஏரிக்கும் இடையே கால்வாய் அமைக்க வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது, தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் நித்தியானந்தன், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திந்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரைக் கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர்.

தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி, விவசாயிகளுக்கு எதிராக நடப்பதுடன், விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடும் அமைப்புகள் மற்றும் கட்சியினருக்குத் தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். மேலும், கொ.ம.தே.க தலைவர் ஈஸ்வரனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல், கோவை கவுண்டம்பாளயம் பகுதியில் கொ.ம.தே.க கட்சித் தொண்டர்கள் ஈஸ்வரன் கைதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.