கோவை முத்தண்ணன் குளக்கரை அருகே உள்ள பனைமரத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்..!

கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரை அருகே உள்ள பனைமரத்தூரில் 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன.

கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரை அருகே உள்ள பனைமரத்தூரில் 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குளக்கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றும் பணி நிறைவடைந்தது. அதில், சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. அப்பகுதியில், உள்ளவர்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்று இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. 

இதனிடையே, முத்தண்ணன் குளக்கரை அருகே உள்ள பனைமரத்தூரில் 50 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில், 15 வீடுகளைச் சேர்ந்த மக்கள் காலி செய்துவிட்டுச் சென்றனர். மற்றவர்கள் தங்களது வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே இருந்தனர். 

இதைதொடர்ந்து, அவர்களுக்கு கடந்த வாரம் மாநகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, தொடர்ந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின், அவர்கள் வீடுகளை காலி செய்து விட்டனர். இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...