கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள பிரிமியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40), இவர் மனைவி ஜெயா (35). சுரேஷ் மற்றும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயா வசித்துவரும் வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டின் உரிமையாளர் ராஜகோபால் மற்றும் அவர் மனைவி கோமதி ஆகியோர் வலியுறுத்தி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஜெயா தான் கொடுத்த மூன்று லட்ச ரூபாயை திரும்ப கொடுத்தால் வீட்டை காலி செய்வதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ராஜகோபால், கோமதி ஆகியோருடன் சேர்ந்து கணவர் சுரேஷ், தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ஜெயா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜெயா கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.