ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி: திருப்பூரில் 650 மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பு..!

திருப்பூர்: ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் 56 வகையான அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என்று IMA, இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

திருப்பூர்: ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் 56 வகையான அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என்று IMA, இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்திருந்தது. 

அதன்படி, இன்று திருப்பூரில் 650 மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில், மத்திய அரசு ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் அலோபதி மேற்படிப்பு படித்து அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் அலோபதி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் 150க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு 650 மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், அவசர மற்றும் அறுவை சிகிச்சைகள், பிரசவ மற்றும் கொரோனா சிகிச்சைகள் தடையின்றி அளிக்கப்பட்டு வருவதாக, மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...