திருப்பூர்: ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் 56 வகையான அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என்று IMA, இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று திருப்பூரில் 650 மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில், மத்திய அரசு ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் அலோபதி மேற்படிப்பு படித்து அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் அலோபதி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் 150க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு 650 மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், அவசர மற்றும் அறுவை சிகிச்சைகள், பிரசவ மற்றும் கொரோனா சிகிச்சைகள் தடையின்றி அளிக்கப்பட்டு வருவதாக, மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.