கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாலையூர் பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் அலி (வயது 30), இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவையிலிருந்து குரும்பபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென்று நிலை தடுமாறிய அவர் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதினார்.

அதில், பலத்த காயத்துடன் மயங்கி கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி சிந்தாமணி (வயது 50). இவர் விளாங்குறிச்சி சாலையில், நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் சிந்தாமணி மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பாலமுருகன் (28), என்பவரை கைது செய்தனர்.