கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே 10ம் வகுப்பு மாணவி மாயம்..! போலீசார் விசாரணை

கோவை: கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே 10ம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே 10ம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே உள்ள எம்.என்.ஜி வீதியைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மகள் கவிதா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கவிதா தனது பெற்றோரிடம் அருகே உள்ள கடைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மாணவியின் தோழி ஆகிய வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால், எங்கும் அவர் செல்லவில்லை என்பது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து, புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...