கோவை குனியமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் 15 நாட்களாக தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் - பொதுமக்கள் அச்சம்!

கோவை: கோவை குனியமுத்தூர் கோசல் நகர் குடியிருப்பு பகுதியில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் கோசல் நகர் குடியிருப்பு பகுதியில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கோவையின் அனைத்து குளங்களும் நிரம்பி வரும் நிலையில், குனியமுத்தூர் கோசல் நகர் பகுதி குடியிருப்புகளில் மழைநீர் மற்றும் அப்பகுதியில் உள்ள குளத்தில் இருந்து வரும் நீரால் குடியிருப்புகள் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளது.



இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு மேலாக நீர் வெளியேற்றப்படாததால் நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.



இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்ததாகவும் பிரதான சாலையில் உள்ள நீரை மட்டும் வெளியேற்றிவிட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள நீரை வெளியேற்ற இன்று வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்



மேலும், மழைநீர் வெளியேற்றப்படுவதால் அப்பகுதி மக்கள் சாலையில் நடப்பதற்கும் வேலைக்குச் செல்வதற்கும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கொசு மற்றும் விஷப்பூச்சிகளால் இரவு நேரங்களில் குழந்தைகளை வைத்துக்கொண்டு தூங்காமல் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், உடனடியாக அரசு இப்பகுதியில் வடிகால் அமைத்து நீரை வெளியேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...