கோவை பாலக்காடு நெடுஞ்சாலையில் கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல்; இருவர் கைது..!

கோவை: கோவையில் கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த, இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவையில் கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த, இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பிஸ்வாஸ் (40), எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இரு தினங்களுக்கு முன், அவர் கோவைக்கு குடும்பத்துடன் பொருட்கள் வாங்க காரில் வந்தார். பின்னர், பொருள்களை வாங்கிவிட்டு, கோவையில் இருந்து, பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். 

அப்போது, மதுக்கரை குவாரி ஆபீஸ் அருகே செல்லும்போது, குரும்பபாளையம் ரோட்டில் இருந்து ஒரு பைக், கார் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதனால், பிஸ்வாஸ் காரை நிறுத்தினார். அப்போது, பைக்கில் வந்தவர்கள் காரின் முன் பைக்கை நிறுத்தி, பிஸ்வாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், காரின் முன் கண்ணாடியை உடைத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதனையடுத்து, பிஸ்வாஸ் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், போலீசார் சாமி கோவில் வீதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சசிகுமார் (21), தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பிரபு (26) ஆகியோரை கைது செய்து, மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கில் சம்மந்தப்பட்ட, பிரவீன் (21) போலீஸார் தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...