கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது- கோவை ஆட்சியர் ராஜாமணி தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது, என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது, என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், துரிதமாக மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகள் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது.

கோவையில் தினசரி 4000 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனையில் அதிக பட்சமாக 140 க்கும் நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. இன்னும், வரும் நாட்களில் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது, என்றார்.

கோவையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது, ஆட்டோ, லாரி, பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக பொது மக்கள் அலட்சியமாக இருப்பதும், முககவசமும் அணியாமல் வெளியில் செல்வது மிகவும் ஆபத்தானது. இதனால், மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் முககவசம் அணிவது குறித்து உள்ளூர் நிர்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...