கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், 100 வாகனங்களை குடிமைப்பொருள் தாசில்தார்கள் தணிக்கை செய்தனர்.

கோவையில் இருந்து கேரளாவிற்கு அடிக்கடி லாரிகள், ஆட்டோக்கள், கார்கள் மூலமாக தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு கேரளாவில் அவை பட்டை தீட்டப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது.
இதனிடையே, கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவின் பேரில் கோவை வடக்கு குடிமைப்பொருள் தாசில்தார் சுமதி, தெற்கு தாசில்தார் விமலா, உதவி பங்கீட்டு அலுவலர் சரகம் 1 சகுந்தலா மணி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், குடிமைப்பொருள் அலுவலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று ஆனைகட்டி அருகே தமிழக கேரள எல்லையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் ஆட்டோ, லோடு ஆட்டோ, கார், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் என கோவையிலிருந்து கேரளா செல்லக்கூடிய அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் ஆர்.சி, இன்சூரன்ஸ் மற்றும் கேரளா செல்வதற்கான காரணத்தையும் முழு விவரங்களையும் வாங்கினர்.

காலை தொடங்கி மாலை வரை இந்த வாகன தணிக்கையில் தாசில்தார்கள் ஈடுபட்டனர். இதில் எந்தவிதமான ரேஷன் அரிசியும் கடத்தப்படவில்லை என்று தெரிந்த பின்பு திரும்பினர்.