கோவையில் பட்டப்பகலில் துணிகரம் தொழிலதிபர் வீட்டில் 50 பவுன் நகை 2 லட்சம் பணம் கொள்ளை

கோவை: கோவையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பீளமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பீளமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு, நேரு நகர், புஷ்பம் கார்டனை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அந்த பகுதியில் சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். தினமும், அவரும் அவரது மனைவியும், வீட்டை பூட்டி விட்டு கம்பெனிக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வருவது வழக்கம். 

இந்த நிலையில், நேற்று பகல் சதீஷ்குமார் தனது மனைவியுடன், வழக்கம்போல் கம்பெனிக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்துவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியான, சதீஷ்குமார் உள்ளே சென்று பார்த்தார். 

அப்போது, வீட்டில் பீரோ திறந்து கிடந்துள்ளது. அதில் இருந்த துணிகள், அனைத்தும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன, மேலும் பீரோவில் இருந்த வைர நெக்லஸ், செயின், மோதிரம், வளையல் உட்பட 50 பவுன் தங்க நகைகள் ரூபாய் 2 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை காணாமல் போய் இருந்தது. 

கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, சதீஷ்குமார் பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், ஏதேனும் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகி இருக்கிறதா? என்பதையும் கண்காணித்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...