கோவை: மத்திய அரசு இயற்றி உள்ள வேளான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை: மத்திய அரசு இயற்றி உள்ள வேளான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் உழவர் சந்தை, சிறு, குறு கடை வியாபாரிகள் நாடு தழுவிய போராட்டதிற்க்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்து உள்ளனர். ஆனால், சில பகுதிகளில் வழக்கம் போல் கடைகள் செயலபட்டு வருகின்றன.
குறிப்பாக, கோவை டவுன்ஹால், பெரியகடை வீதி, உப்புகிணறு வீதி உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் சிறு, குறு வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேபோல், நடைபாதை வியாபாரிகளும் கடைகளை அடைத்து ஆதரவினை தெரிவித்து உள்ளனர்.
அதேபோல, காந்திபுரம் பகுதியில் செயல்படும் செல்போன் உதிரிபாக விற்பனையாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்களும் கடைகள் அடைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அதே வேளையில், தனியார் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்துகள் குறைந்த அளவே இயங்கி வரும் நிலையில், பயணிகளும் குறைவாகவே காணபட்டனர். கோவையில், 90% ஆட்டோக்களும் இயங்கவில்லை.