கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவர் கைது!

கோவை: கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை இருகூர், அங்காளியம்மன் வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (56), இவர் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு இரவு இவர் சிங்காநல்லூரில் உள்ள தனது நண்பர்களுக்கு பணம் கொடுப்பதற்காக எஸ்ஐஎச்எஸ் காலனி ரயில்வே தண்டவாளம் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது, அவருக்கு எதிரே வந்த 2 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரன் கழுத்தில் வைத்து அவரிடம் இருந்த பணம் 10 ஆயிரத்தை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரன் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் இருகூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துரத்திப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த சங்கர் (25), இருகூரை சேர்ந்த சிவக்குமார் (24), என்பதும் இவர்கள் இரண்டு பேரும் ஈஸ்வரிடம் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் இவர்கள் 2 பேர் மீதும் சிங்காநல்லூர், பீளமேடு ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...