திருப்பூர்: அவிநாசி ஊராட்சியில் 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தத்தனூர், புலிப்பார் மற்றும் பஞ்சை தாமரைக்குளம் ஆகிய 3 ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையாக தத்தனூர் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதையடுத்து, தற்போது நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அவிநாசி வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்த அப்பகுதி பொதுமக்கள் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தத்தனூர், புலிப்பார் மற்றும் புஞ்சை தாமரைக்குளம் ஆகிய 3 ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர்.
மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்த அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தற்போது அவிநாசி அத்திக்கடவு அவினாசி திட்டம் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமையுமானால் அப்பகுதி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் தங்கள் விவசாய நிலங்கள் பறிக்கும். எனவே, அப்பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.