கோவையில் நண்பர்களுடன் கிணற்றில் பந்து விளையாடிய சட்டக்கல்லூரி மாணவர் பரிதாப பலி..!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஜக்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 54). இவரது மகன் ஹரிஷ் (22), பஞ்சாப் மாநிலம் சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஜக்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 54). இவரது மகன் ஹரிஷ் (22), பஞ்சாப் மாநிலம் சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.

விடுமுறை என்பதால், வீட்டிலிருந்தத ஹரிஷ் நேற்று தனது பள்ளி நண்பர்களான கௌசிக், முகுந்த் ஆகியோருடன் மதுக்கரை வழுக்குப்பாறையை சேர்ந்த நண்பர் அஸ்வின் என்பவரது தோட்டத்திற்கு சென்றனர். பின்னர், அஸ்வின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு தோட்டத்தில் 4 பேரும் பேசிக் கொண்டிருந்தன.

இதையடுத்து, தோட்டத்தில் இருந்த சுமார் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி 4 பேரும் தண்ணீரில் பந்து விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீரில் தத்தளித்த ஹரிஷ் நீரில் மூழ்கினார்.

அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர், ஆனாலும் ஆழம் அதிகமாக இருந்ததால், ஹரிஷால் மேலே வர முடியவில்லை. இது குறித்து, மதுக்கரை போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி கிணற்றில் இருந்து ஹரீஸ் உடலை மீட்டனர்.

இதையடுத்து, போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...