கோவை பூ மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 5 கடைகளுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில் விதிமீறி திறக்கப்பட்ட 5 பூக்கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில் விதிமீறி திறக்கப்பட்ட 5 பூக்கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதியதாக 95 கடைகளும் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை இங்கு பூக்கடைகள் திறக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், பூ மார்க்கெட் வளாகத்தின் அருகே மாநகராட்சியின் தடையை மீறி சிலர் பூக்கடைகள் திறந்து வியாபாரம் மேற்கொள்வதாக புகார் வந்தது.

இதனையடுத்து, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் அரசன் தலைமையில், உதவி வருவாய் ஆய்வாளர் மேனகாகுமாரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுமதி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூமார்க்கெட் வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு விதிமுறைகளை மீறி 5 பூக்கடைகள் திறக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...