திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது!

கோவை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



கோவை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் திருக்குவளையில் தடையை மீறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கோவை மாவட்ட திமுகவினர் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.



சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், கோட்டை அப்பாஸ், நாச்சிமுத்து ஆகியோர் தலைமையில் திமுகவினர் அங்கு திரண்டதை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.



திடீரென போலீசாரின் பாதுகாப்பை மீறிய திமுகவினர் சாலையின் நடுவே அமர்ந்து உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்து கோஷங்கள் எழுப்பினர்.



இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சரவணம்பட்டி சத்தியமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்ட மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...