கோவையில் முதல்வரை வரவேற்க அமைக்கபட்டு இருந்த மேடை அருகே இருந்த மின்விளக்கு சரிந்து விழுந்தது

கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்தார். முதல்வர் வருகையையொட்டி ஏராளமான தொண்டர்கள் ஆங்காங்கே குவிந்து இருந்தனர்.

கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்தார். முதல்வர் வருகையையொட்டி ஏராளமான தொண்டர்கள் ஆங்காங்கே குவிந்து இருந்தனர். 

மேலும், முதல்வர் செல்லும் பாதையிலும் சிறு மேடைகள் அமைக்கப்பட்டு வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், கோவை காளப்பட்டி - விளாங்குறிச்சி சாலையில் தனியார் பெட்ரோல் அருகே வரவேற்பளிக்க மற்றும் தொண்டர்கள் நிற்க, சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், நேற்று பலத்த மழை பெய்ததால், அந்த மேடையின் அருகில் இருந்த மின்விளக்கு சரிந்து விழுந்தது. நல்ல வேளையாக, மழை காரணமாக அப்பகுதியில் தொண்டர்கள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

ஏற்கனவே, கோவையில் அதிமுகவினர் வைத்த கட் அவுட் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்ததும், கட்சி கொடி கம்பம் சாய்ந்து இளம் பெண் விபத்துக்குள்ளாகி கால் துண்டிக்கப்பட்ட, சம்பவங்கள் நடைபெற்று இருப்பது குறிப்பிடதக்கது. 

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...