தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேருக்கு தொற்று உறுதி..! 2,504 பேர் டிஸ்சார்ஜ் - 30 பேர் பலி!

கோவை: தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7,34,429 ஆக அதிகரித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7,34,429 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தை கடந்து மேலும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,31,942 ஆக இருந்தது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 2,487 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,34,429 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம், தமிழகத்தில் இன்று மட்டும் 2,504 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 7,04,031 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 11,244 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 203 ஆக உள்ளது. இதுவரை பரிசோதனை மையங்கள் மூலம் ஒரு கோடியே 2 லட்சத்து 45 ஆயிரத்து 248 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 657 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,02,495 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவையில் இன்று மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44,209 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நீலகிரியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீலகிரியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6,800 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13,215 ஆக உயர்ந்துள்ளது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...