பிரதமர் மோடியின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கக் கோரி கோவையில் பாஜகவினர் தர்ணா போராட்டம்!

கோவை: பிரதமர் மோடி அவர்களின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்று கோவையில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பிரதமர் மோடி அவர்களின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்று கோவையில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

1978ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசாணையின்படி அரசு அலுவலகங்களில் நாட்டின் பிரதமர் அவர்களின் புகைப்படத்தை வைக்கலாம் என்று அரசாணை உள்ளது.



அதன்படி அரசு அலுவலகங்களில் தற்போது உள்ள பிரதமர் மோடி அவர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மோடி அவர்களின் புகைப்படத்துடன் வந்திருந்தனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்ததால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.



இதனால் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் பாஜகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அதனைத் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறையினர் அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...