தமிழகத்தில் தள்ளிப் போகிறதா பள்ளி, கல்லூரிகள் திறப்பு? தமிழக அரசு ஆலோசனை நடத்தியதாக தகவல்!

கோவை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது தள்ளிவைக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கோவை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது தள்ளிவைக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், திடீரென நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாகவும் இந்த ஆலோசனையில் கொரோனா மற்றும் பருவ மழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாமா என்று அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் வரும் 16ம் தேதி 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படும் என்றும் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனினும் இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து முறையான அறிவிப்பு வந்த பின்னரே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...