திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி திருப்பூரில் சுகாதார பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கொரானா காலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால் இதுவரை சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், அதேபோல் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்க மாநகராட்சி மறுத்து வருவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பணத்தினை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கருவம் பாளையம் பகுதியில் உள்ள சுகாதார அலுவலகம் முன்பாக ஏஐடியூசி சுகாதார பணியாளர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.