நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!

கோவை: நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.



இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் சமீபகாலங்களாக சமூக வலைதளங்களில் ஊடகவியலாளர்கள், திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் ஆகியோர் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. புகார்கள் அளிக்கப்பட்டாலும் சமூக விரோதிகள் சிலர் இச்செயல்களை அச்சமின்றி தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல திரைப்பட கலைஞர் விஜய்சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை குறித்த 800 என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடாது என பதிவிட்டு மீறி அந்த படத்தில் நடித்தால் மகளை பாலியல் படுகொலை செய்வோம் என பகிங்கிரமாக சமூக வலைத்தளத்தில் மர்ம நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.



தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மிரட்டல் பதிவுகளை வெளியிடுவதாகவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...