கோவை: சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சியில் உள்ள சாம்பிராணி குட்டை, தடுப்பணை மற்றும் அதன் ஓடையை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கு துவக்க பூஜை செய்து சிரவை ஆதினம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி அவர்கள் மற்றும் கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனிச்சாமி அவர்கள் ஆகியோர் துவங்கி வைத்துள்ளனர்.

கீரணத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்நுட்ப பூங்காக்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதையொட்டிள்ள அங்கு வாழும் மக்களும் கழிவு பொருட்களை நீர் வழித்தடங்கள் மற்றும் குட்டைகளில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
அதனால் சீரமைக்கப்படவுள்ள ஒடையின் முன்புறம் கம்பிவேலி அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஓடையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது தவிர்க்கப்படும். மேலும், கீரணத்தம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.
மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, ராபர்ட் பாஷ் நிறுவன நிதி பங்களிப்பில், கௌசிகா நீர்கரங்கள் மற்றும் ராக் அமைப்பு உதவியுடன் கீரநத்தம் நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பு இந்த பணிகளை முன்னெடுக்கிறது.
கோவையில் மென்பொருள் நிறுவனங்களின் புகழிடமாக விளங்கும் கீரணத்தம் ஊராட்சியில் நீர்வளங்களை மேம்படுத்தி நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் பசுமை பணிகளில் 56 வாரங்களுக்கு மேலாக கீரணத்தம் நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது சாம்பிராணி குட்டை, அதன் 1.5கி.மீ ஓடை மற்றும் தடுப்பணை சீரமைக்கப்படவுள்ளது. இவற்றின் மூலம் சுற்றுவட்டார மக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் பயன்பெறும். கீரணத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளை அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டல் இரண்டாம் திட்டத்தில் இணைக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் குழு தெரிவித்துள்ளனர்.