ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரிப்பு..!

கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று, நடைபெற்ற ஏலத்தை, கோவை விற்பனை குழு முதுநிலை செயலர் கெளசல்யா மோகன் ஆய்வு செய்தார்.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று, நடைபெற்ற ஏலத்தை, கோவை விற்பனை குழு முதுநிலை செயலர் கெளசல்யா மோகன் ஆய்வு செய்தார்.

இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர், மணிவாசகம் கூறும்போது: ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 490 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து அதிகாரிகள் ஏலமிட்டனர்.

முதல் தர கொப்பரை 265 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.10,680 -க்கும், அதிகபட்சம் ரூ. 11,630 -க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 225 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9,015 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 6,550 -க்கும் விற்பனையானது. 11 வியாபாரிகள், 74 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட 50 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 235 குவிண்டால் ரூ. 20 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது, என்றார்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...