உலக பேரிடர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்பு பணிகள் குறித்த ஒத்திக்கை நிகழ்ச்சி!

கோவை: உலக பேரிடர் தினத்தை முன்னிட்டு மீட்பு பணிகள் குறித்த ஒத்திக்கை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக பேரிடர் தினத்தை பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஒத்திக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேரிடர் காலத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளே சிக்கி உள்ளவர்கள் உயிருடன் இருக்கின்றனரா என்பதை கண்டறியும் கருவி, கான்கிரீட் கட்டர், டிரில்லர், தீயணைக்கும் உபகரணங்கள், தண்ணீரில் சிக்கியவர்களை காப்பாற்ற உபயோகிக்கும் மோட்டார் ரப்பர் படகு, ரோப் லேடர், ஹைட்ராலிக் கட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



இதில் அன்னூர், கணபதி, பீளமேடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் கோவை தெற்கு, வடக்கு, மத்திய தீயணைப்பு வீரர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் கூறுகையில், தீயணைப்பு துறையினர் பணி மகத்தானது எனவும் பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறை வீரர்களின் தீவிர முயற்சியில் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சாதாரண பொருட்களை கொண்டு மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியும் என்பதை செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்து உள்ளனர் என்றார்.



இந்த ஒத்திகை நிகழ்ச்சியை வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ், தனலிங்கம் மாவட்ட ஆட்சியரிடன் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், வருவாய் துறை அலுவலர்கள், ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்தனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...