தமிழக முதல்வரின் தாயார் காலமானார்: ஸ்டாலின் மற்றும் பொது மக்கள் இரங்கல்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) இன்று அதிகாலை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலைகுறைவால் காலமானார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) இன்று அதிகாலை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலைகுறைவால் காலமானார்.

தாயார் தவுசாயம்மாள் மறைவை அடுத்து உடனடியாக, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், நேரில் ஆறுதல் கூற சேலம் வர உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும், முதல்வரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கல்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அவர்களது ஆழந்த இரங்கலை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...