கோவையில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு; வாலிபருக்கு சரமாரி கத்தி குத்து..!

கோவை: திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த கருணா என்பவர் குணசேகரன் (24). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று கிடைக்க பெற்ற சம்பள பணத்தை கொண்டு புதிய செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.


கோவை: திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த கருணா என்பவர் குணசேகரன் (24). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று கிடைக்க பெற்ற சம்பள பணத்தை கொண்டு புதிய செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.

பின்னர், ஈச்சனாரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த இரண்டு வாலிபர்கள், குணசேகரனிடம் மது அருந்த பணம் தருமாறு கேட்டு உள்ளனர்.

அதற்கு, குணசேகரன் பணம் தர மறுத்ததோடு, அங்கிருந்து வெளியேற முயற்சித்து உள்ளார். அப்போது, அவரை துரத்தி வந்த இந்த இரண்டு வாலிபர்கள், குணசேகரனை பிடிக்குமாறு எதிரே வந்த நண்பர்களிடம் கூறியுள்ளனர்.

பின்னர், அவர்கள் கத்தியால் குத்திவிட்டு, குணசேகரனிடமிருந்து இருந்து செல்ஃபோன் மற்றும் 2000 ரூபாய் பணத்தை பறித்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து, அப்பகுதியில் உள்ளவர்கள் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை, தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த குணசேகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் போலீசார் கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வந்த நிலையில், ஈச்சனாரி பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் ஈச்சனாரி பகுதியை சேர்ந்த பிரவீன் (20),போத்தனூரை சேர்ந்த தென்னரசு (20),சீனிவாசா நகர் பகுதியை மகேஷ் ராஜ் (21) கணேசபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் சிவபாண்டி என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...